பஸ் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

By T Yuwaraj

18 May, 2022 | 01:02 PM
image

 யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் மதவாச்சி சியம்பலகஸ்வெவ பிரதேசத்திற்கு அருகில் நேற்று (17) மாலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்தில் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதிக்கு அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பனைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட மற்றுமொருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right