(எம்.மனோசித்ரா)
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து கடந்த 9 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இன்று (18) புதன்கிழமை காலை 6 மணி வரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவை தொடர்பில் அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்ற விசாரணைப்பிரிவுகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவற்றில் 444 முறைப்பாடுகள் மேல் மாகாணத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளன.
தென் மாகாணத்தில் 118 முறைப்பாடுகளும், வடமேல் மாகாணத்தில் 103 முறைப்பாடுகளும் ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 258 சந்தேகநபர்கள் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 67 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இது வரையில் ஒட்டுமொத்தமாக 664 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 206 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 271 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக சட்ட விரோத ஒன்று கூடல் , தாக்குதல்களை மேற்கொண்மை, பாரதூரமான காயங்களுக்கு உட்படுத்தியமை , சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்செயல்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலதிக விசாரணைகள் அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM