போன் கிராப்டிங் இயற்கையானதா.?

Published By: Robert

26 Oct, 2016 | 01:42 PM
image

ஏதோ சில காரணங்களால் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இடைவெளி ஏற்பட்டுவிட்டால் அதை பூர்த்திச் செய்வதற்கு போன் கிராப்டிங் பயன்படுத்தப்படுகிறது. வேறு சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட இடங்களில் எலும்பு கூடாமல் அதாவது வளராமல் தேக்கமடைந்திருக்கும். அந்த இடத்திலும் இந்த போன் கிராப்டிங் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த போன் கிராப்டிங்கில் கான்செலஸ் போன் கிராப்டிங், கார்டிகல் போன் கிராப்டிங் என்று இரண்டு வகையான போன் கிராப்டிங் இருக்கிறது. அதில் முதலாவது போன் கிராப்டிங் சிகிச்சையில் எலும்புகள் சீக்கிரமாக கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது வகை போன் கிராப்டிங் சிகிச்சையில் அவ்விடத்தில் எலும்புகள் வளராது. ஆனால் அங்கிருக்கும் எலும்புகளுக்கு பக்கத்துணையாக இது இருக்கும். குறிப்பாக முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு அங்குள்ள எலும்பகள் அழுந்தத் தொடங்கினால் அதனை காக்கும் பொருட்டு இவ்வகையான கார்டிகல் போன் கிராப்டிங் செய்து கொள்வதுண்டு. இவை அப்பகுதியில் ஒரு ஊன்றுகோல் போல் செயல்பட்டு நிரந்தர நிவாரணம் வழங்கும்.

பொதுவாக போன் கிராப்டிற்கு நோயாளிகளின் உடலில் இருக்கும் தேவையற்ற மற்றும் அதிக பயன்பாட்டில்லாத எலும்புகளிலிருந்தே எடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இலியாக் கிறஸ்ட் போன் மற்றும் பிராக்ஸிமல் டிபியல் போன் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே போன் கிராப்டிங் என்பது இயற்கையானதே. போன் சிமெண்டிங் போல் செயற்கையானதல்ல.

டொக்டர் P. தியாகராஜன் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13