உக்ரேன் மீது ரஷ்யா 3 மாதங்களுக்கு முன்னர் படையெடுப்பை மேற்கொண்டதற்குப் பின்னர் முதல் தடவையாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று செவ்வாய்க்கிழமை (17) தனது மனைவி ஒலெனா சகிதம் பொது இடத்தில் தோன்றியுள்ளார்.

உக்ரேன் 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிளவடைந்ததையடுத்து அந்நாட்டை ஆட்சி செய்த முதலாவது ஜனாதிபதியான லியோனிட் கிராவ்சுக்கின் மரணச்சடங்கு கீவ் நகரில் நேற்று இடம்பெற்றது.

கிராவ்சுக் தனது 88 ஆவது வயதில் காலமாகியிருந்தார்.
இந்த மரணச்சடங்கில் கீவ் நகரின் மேயர் விதாலி கிட்ஸ்ச்கோ உள்ளடங்கலாக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தானும் தமது இரு பிள்ளைகளும் கொல்லப்படும் அபாயம் உள்ளதைக் கருத்திற் கொண்டு தான் தனது கணவரை சந்திக்காது இருந்து வருவதாகவும் தான் தனது கணவருடன் தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொண்டு வருவதாகவும் ஒலெனா தெரிவித்து சுமார் ஒரு மாத காலத்தில் அவர் தனது கணவருடன் இணைந்து மேற்படி மரணச்சடங்கில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.;
