நிலையியற் கட்டளையை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு  

Published By: Digital Desk 4

17 May, 2022 | 09:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற நிலையியற் கட்டளையை ரத்துச்செய்து ஜனாதிபதியின் மீது  அதிருப்தியை வெளிப்படுத்தும்   யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான பிரேரணை  இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்  51 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. 

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள பரிந்துரை | Virakesari.lk

இந்த யோசனைக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 68 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்து எதிரணியில் அமர்ந்துள்ள எம்.பிகளும் இந்த யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், பிரேரணை சமர்ப்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டார். 

இதன்போது அவர், மக்கள் வெளியில் இருந்து தெரிவிக்கும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் பிரதிபளிக்கச்செய்யவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

அந்த வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும், பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமற்போனதன் மீதான பாராளுமன்றத்தின் அதிருப்தியை தெரிவித்து பிரேரணை கொண்டுவருவந்து விவாதிப்பதற்கு, நாளைய அமர்வில் பாராளுமன்ற நிலையியற்கட்டளை 27 இன் ஏற்பாடுகளிலிருந்து இடைநிறுத்த அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சுமந்திரன் எம்.பி. கொண்டுவந்த பிரேரணையை வழிமொழிந்து தெரிவிக்கையில், 

ஜனாதிபதி இந்த பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர். கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின்போது, ஜனாதிபதி 35 தடவைகள் அவரின் பொறுப்பை மீறி இருக்கின்றார்.

அதனால் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை விவாதிப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், 

நிலையியறட கட்டளையை நிறுத்திவைப்பதற்கு நாங்கள் இணக்கம் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே கட்சித் தலைரவர்கள் கூட்டத்தில் தெரிவித்திருந்தோம். சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த பிரேரணை தொடர்பான விவாதத்தை நிலையியற்கட்டளையின் பிரகாரம் கொண்டுவந்து விவாதிப்பது தொடர்பில் சபாநாயகருக்கு தீர்மானிக்கலாம்.

என்றாலும் இன்றைய தினம் நிலையியற் கட்டளையை நிறுத்தி பிரேரணை கொண்டுவர நாங்கள் எதிர்ப்பு. ஏனெனில் நாட்டில் இடம்பெற்றிருந்த பாரிய அசம்பாவிதம் தொடர்பான பிரேரணை ஒன்றை ஆளும் தரப்பு கொண்டுவருவதாக நாங்கள் தெரிவித்திருந்தோம்.  எனவே நிலையிற் கட்டளையை நிறுத்துவதற்கு நாங்கள் இணக்கம் இல்லை. அவ்வாறு என்றால் வாக்களிப்பு நடத்தி அதுதொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.

இறுதியாக சபாநாயகர் நிலையியற் கட்டளையை நிறுத்துவதற்கு சபையின்  பெரும்பான்மை விருப்பத்தை அறிந்துகொள்ள  வாக்கெடுப்புக்கு செல்வதாக தெரிவித்து கோரம் மணியை ஒலிக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு.தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆளும் தரப்புடன் சுயாதீனமாக செயற்படும் எம்.பிகளில் அநேககர்  எதிராக வாக்களித்தனர்.  37 எம்.பிகள் வாக்களிப்பின் போது சபைக்கு பிரசன்னமாகியிருக்கவில்லை. அதன் பிரகாரம் நிலையியற்கட்டளைகளை ரத்து செய்து ஜனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை 51மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து   கடந்த 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09