( எம்.எப்.எம்.பஸீர்)
கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, பரவிய வன்முறைகளில் அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பாராலுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது ஜன பெரமுன பிரமுகர்களின் வீடுகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிசார் செவ்வாய்க்கிழமை (17) அறிவித்தனர்.
கிருலப்பனை, வெலிக்கடை ,முல்லேரியா மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸார் இது குறித்து அறிக்கைகள் ஊடாக அறிவித்தனர்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வீடு மற்றும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஆதரவாளராக பரவலாக அறியப்படும் பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோரின் வீடுகள் தாக்கப்பட்டமை தொடர்பில் கிருளப்பனை பொலிசார் விசாரித்து வருவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவங்களுக்காக ஒருவரை கைது செய்து பொலிசார் நீதிமன்றில் ஆஜர் செய்துள்ள நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் வெலிக்கடை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
அத்துடன், கொட்டிகாவத்த, முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் இந்துனில் ஜகத் குமாரவின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தி நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதேவேளை மாகாண சபை உறுப்பினர் ரேனுக பெரேராவின் வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM