ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் தனது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளார் - சுமந்திரன் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 5

17 May, 2022 | 10:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தும் போது 10 நாட்களுக்குள் அது தொடர்பில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். 

Sumanthiran agrees to lead forthcoming law reform committee

ஆனால் கடந்த 6 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பில் குறித்த நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூட்டப்படாமையினால் அந்தச் சட்டத்தை தொடர்வதில் சிக்கல் காணப்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் (17) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளால் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்.

எம்.பி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக எனது கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். 

வன்முறைகள் எல்லாம் பெறுமதியற்றவை என்றே கூற வேண்டும். பெரும்பாலான எம்.பிக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாற்றங்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளேயே நடக்க வேண்டும். இதனை அழிக்கக் கூடாது. இல்லையென்றால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆட்சியாக மாறிவிடும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வை வீட்டுக்கு போகுமாறு கோரி வீதிகளில் போராட்டம் நடத்துகின்றனர். 

இங்கு விவாதத்தை நடத்துவதற்குக் கூட தயாரின்றி இருக்கின்றனர். போராட்டங்கள் ஆரம்பமாகி ஒரு மாதத்தையும் கடந்துவிட்டது.

இந்த விடயம் தொடர்பில் இங்கு கலந்துரையாடுவதற்கு ஏன் நாங்கள் அஞ்ச வேண்டும். இந்த பாராளுமன்றம் சட்டத்தின் நியாயத்தை இழந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். 

இங்கு வாக்களிப்பின் மூலம் பதவிகளை தக்க வைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

அவ்வாறு மதிப்பளிக்காது இருக்க முடியாது. அதன் ஆபத்தை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்  .

அத்துடன் தற்போது ஜனாதிபதியால்  அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பிரகடனத்தை மேற்கொள்ளும் போது பாராளுமன்றம் 10 நாட்களுக்குள்  கூட்டப்பட வேண்டும். 

இதன்படி கடந்த 6 ஆம் திகதி அந்தச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது என்றால் இன்றே (17ஆம் திகதி) 10 ஆவது நாளாகும். 

இன்று இது நிறைவேற்றப்பட வேண்டும். அரசியலமைப்பில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் அது நடக்கவில்லை. ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இன்னுமொரு பிரகடனத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எனவே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். அதேபோன்று அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையும் கண்டிக்கின்றோம். 

இந்நிலையில் சட்டமா அதிபர் 22 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இந்த சபையில் எம்.பிக்களாகவும், ஆளும் கட்சி பக்கத்திலும் இருக்கின்றனர். 

எனவே ஜனாதிபதியிடமே அதிகாரம் காணப்படுகின்றது. அவரே  இதற்கு பொறுப்பான பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்றார்.

அத்துடன்  தற்போதுள்ள பிரதமர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது, ஜனாதிபதி தொடர்பான பிரேரணையை வாசிப்பதாக கூறினார். 

இதற்கு சாதகமாக வாக்களிப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் கூறியிருந்தார். ஆனால் இப்போது மாறியுள்ளார். பிரதமராக பதவியேற்று கொள்கையை மாற்றியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ்...

2024-05-23 14:50:11
news-image

வெசாக் நிகழ்வை முன்னிட்டு சிறைக் கைதிகளை...

2024-05-23 14:20:50
news-image

கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற...

2024-05-23 14:05:43
news-image

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி...

2024-05-23 14:01:55
news-image

உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச்...

2024-05-23 13:59:34
news-image

திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீனவர்கள் இருவர்...

2024-05-23 13:00:32
news-image

நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன்...

2024-05-23 13:18:03
news-image

கல்முனை நகரில் ஒருவழிப் பாதை இருவழிப்...

2024-05-23 13:07:36
news-image

இங்கிரியவில் வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

2024-05-23 13:05:32
news-image

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி...

2024-05-23 13:07:23
news-image

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பு ;...

2024-05-23 12:41:01
news-image

இலங்கை பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக் பக்திப்...

2024-05-23 12:31:59