அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரொருவரை ஹபரடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உனவடுன பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்துக்கு மற்றுமொரு வெளிநாட்டு குடும்பத்துடன் சென்ற குறித்த பெண்னை மசாஜ் நிலையத்தின் ஊழியராக பணிபுரியும் 24 வயது ஊழியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த பெண் தலை மற்றும் தோல்பட்டை போன்ற பகுதிகளுக்கு மசாஜ் செய்துகொள்ள வந்திருந்த நிலையில், மசாஜ் நிலையத்தின் ஊழியர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையான குறித்த பெண் தனது காதலருடன் விடுமுறையை கொண்டாடுவதற்கு இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.