தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி, உலகின் சிறந்த வங்கிகளுக்கான அதன் 29வது விருதுகளின் பதிப்பில் அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் அமைப்பினால் 2022 ஆம் ஆண்டிற்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட "இலங்கையின் சிறந்த வங்கி" என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

Sri Lanka's NDB net up 24-pct in September quarter before windfall tax |  EconomyNext

குளோபல் ஃபைனான்ஸ் விருதுகள், உலகெங்கிலும் உள்ள வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையின் முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.

அத்துடன், 2021 ஆம் ஆண்டில் "இலங்கையின் சிறந்த வங்கி" என்ற விருதினை வென்றதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பெற்றுக் கொண்டதுடன், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வென்றதன் மூலம் இந்த விருதை நான்காவது தடவையாக NDB  தன் வசமாக்கிக் கொள்கிறது. 

NDB வங்கியானது இலங்கையின் வங்கியியல் துறையில் "எதிர்காலம் எங்கள் மீது வங்கிச் சேவை செய்கிறது" என்ற வர்த்தக நாமத்தின் கீழ் புதிய அமைப்பினை வகுத்துள்ளது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளில் வங்கி சிறந்து விளங்குவதுடன் அதன் பாதையில் பல சவால்கள் மற்றும் தடைகள் காணப்பட்ட போதிலும், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில் இலத்திரனிய மயமாக்கலை பயன்படுத்துகிறது.

இந்த வெற்றியானது  தொடர்ச்சியான வருமானம் ஈட்டுதல், மூலோபாய முன்முயற்சிகளைப் பெறுதல் மற்றும் சந்தைகளுக்குச் சேவை வழங்குதல் ஆகிய குளோபல் ஃபைனான்ஸ் அமெரிக்காவின் நியாயமான அளவுகோல்களின் அடிப்படையில் NDB இன் ஆற்றலை அது தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

இச் சாதனையானது, இலங்கையின் சிறந்த வங்கித் துறையின் பட்டியலில் நான்காவது பெரிய வங்கி நிறுவனமாக காணப்படும் NDB தனது கணிசமான தாக்கத்தையும் பங்களிப்பையும் அதில் உறுதிப்படுத்துகிறது.

NDB தனக்கு ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் தனித்துவமான செயல்திறனை சக வங்கிகளுக்கு மத்தியில்உறுதிப்படுத்துவதற்காக தனது செயல்திறனில் நிலைத்தன்மையைப் பேணி வருகிறது.

NDB வெளி மற்றும் உள்ளக செயல்முறை தன்னியக்கங்களுக்கான இலத்திரனிய மயமாக்கலை எப்போதும் தழுவியுள்ளதுடன், அதிநவீன வாடிக்கையாளர் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் NDB அரலியா மற்றும் 'இலங்கை வனிதாபிமான' பெண்கள் வலுவூட்டல் முயற்சி போன்ற முன்முயற்சிகள் மூலம் பெண்கள் சந்தைப் பிரிவை வலுவூட்டுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், NDB ஜெயகமு ஸ்ரீலங்கா ஊடாக சிறிய மற்றும் நடுத்தர வியாபார துறைக்கு ஆதரவளிக்கும் வங்கியின் அர்ப்பணிப்பு, தொழில்நுட்ப ஆற்றல்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குதல் போன்றவை போட்டித்தன்மையை அளிக்கிறது.

NDB அதன் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கிவரும் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

குளோபல் ஃபைனான்ஸிடமிருந்து கிடைத்த இந்த வெற்றியின் மூலம், NDB ஆனது, பங்களாதேஷ் சிட்டி வங்கி, DBS வங்கி சிங்கப்பூர், கொமன்வெல்த் வங்கி அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வங்கி போன்ற சிறந்த வங்கிகளின் குழுவில் இணைந்துள்ளது.

29வது சிறந்த வங்கிக்கான விருது வழங்கும் விழா வாஷிங்டன் டி.சி.யில் சர்வதேச நாணய நிதிய உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின் போது நடைபெறும்.

NDB யின் இந்த வெற்றியானது, இலங்கைக்கான Asiamoneyசிறந்த வங்கிக்கான விருதுகளில் NDB "சிறந்த டிஜிட்டல் வங்கி 2021" ஆக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், மேலும் LMD தரவரிசையின்படி "அதிக விருது பெற்ற பெருநிறுவனம் 2021" என்று பெயரிடப்பட்டுள்ளது.

லங்காபே டெக்னோவேஷன் விருதுகள் 2022 இல், நிதி உள்ளடக்கம் மற்றும் ஆண்டின் சிறந்த பொது ATM வழங்குநருக்கான இரு தங்க விருதுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான சிறந்த மெரிட் விருது ஆகியவை வங்கிக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.

NDB இலங்கையில் பட்டியலிடப்பட்ட 4வது பெரியவங்கி மற்றும் NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும். இலங்கையில் உள்ள ஒரேயொரு நிதிச்சேவை நிறுவனமான NDB குழுமம் அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும்சேவை சலுகைகளுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்குவதற்கும்இலங்கையின் நிதிச் சந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுவதிலும் தனித்துவமாகநிலைநிறுத்தப்பட்டுள்ளது.