நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம்

Published By: P. Saranya

17 May, 2022 | 12:58 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாளாந்தம்  80 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளை முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

3,700 மெட்றிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்று இன்றைய தினம் இலங்கை வந்துள்ளதுடன், 3,600 மெட்றிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்று நாளை மறுதினமும் (19) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அதற்கான பணத்தை செலுத்துவதற்கு முடியும் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டார். 

அத்துடன், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள  100 மில்லியன் டொலர் தொகையையும் பயன்படுத்தி அடுத்த வாரத்திற்குள் மேலும் சில சமையல் எரிவாயு தாங்கிய கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வாரமளவில் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக லாப் கேஸ் நிறுவனத் தலைவர் டபிள்யூ.எச்.கே. வேகபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00