இந்தியாவில் ‘தக்காளி காய்ச்சல்’ பரவி வருகிறதா..?

Published By: Digital Desk 5

17 May, 2022 | 12:06 PM
image

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அண்மைக்காலமாக 'தக்காளி காய்ச்சல்' என்ற பெயரில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களை காய்ச்சல் ஒன்று தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

'தக்காளி காய்ச்சல்' அல்லது 'தக்காளி ஜுரம்' எனப்படும் இந்த காய்ச்சலுக்கும், தக்காளி என்ற உணவு பொருட்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. 

அதேபோல் தக்காளி காய்ச்சல் என்பது புது வகையான காய்ச்சலும் இல்லை. இது ஒருவகையான வைரஸால் ஏற்படும் பாதிப்பு. 

இதனை வைத்திய மொழியில் ஹேண்ட் ஃபூட் மவுத் டிஸீஸ் என குறிப்பிடுவதுண்டு.

இத்தகைய பாதிப்பு ஏற்படும் போது கை கால் வலி, மூட்டுகளில் வலி, காய்ச்சல், கை, கால், முதுகு, உடல் ஆகிய பகுதிகளில் திட்டு திட்டாக சிவப்பு வண்ணத்தில் ராஷஸ் ஏற்படும். சிலருக்கு வாயில் புண் ஏற்படக் கூடும்.

இது ஆபத்தான நோயல்ல என்றாலும், மிக அரிதாக ஒரு சிலருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். 

ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்த பாதிப்பு தானாக சரியாகிவிடும். அந்த கால கட்டங்களில் ஏதேனும் வலி, அரிப்பு ஏற்பட்டால், அதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் நிவாரண சிகிச்சையை மேற்கொள்ளலாம். 

இத்தகைய வைரஸ் கிருமி காற்றில் பரவும் தன்மை கொண்டதால் தக்காளி காய்ச்சல் ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நன்மை தரும்.

டொக்டர் கார்த்திகேயன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04