புத்தாக்கமான முறையிலும் நுட்பமான வகையிலும் வடிவமைக்கப்பட்ட அனைவருக்குமான இலங்கையின் வங்கியான DFCC வங்கியின் இணையத்தளத்துக்கு BestWeb.lk விருதுகள் வழங்கும் நிகழ்வில் 3 வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன. 

இடமிருந்து: ஜசிந்தா கம்மன்பில - Bestweb.lk ஒழுங்கிணைப்பாளர், பேராசிரியர். கிஹான் டயஸ் - பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி/ Domain பதிவாளர், தினேஷ் ஜெபமனி – உப தலைவர் /டிஜிட்டல் தந்திரோபாயம் DFCC வங்கி, ஒஷேன் சொய்ஸா – நிறைவேற்று அதிகாரி/டிஜிட்டல் வங்கியியல் DFCC வங்கி, அமிஷ தனன்சூரிய – வங்கியியல் உதவியாளர் /டிஜிட்டல் வங்கியியல், DFCC வங்கி

2009 ஆம் ஆண்டு முதல் LK Domain Registry இனால் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வங்கி மற்றும் நிதியியல் பிரிவில் சிறந்த வங்கி இணையத்தளம் என்பதற்கான தங்க விருது வழங்கப்படாத நிலையில், DFCC வங்கியின் இணையத்தளத்துக்கு வெள்ளி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் ஒட்டுமொத்த சிறந்த தமிழ் இணையத்தளம் மற்றும் சிறந்த சிங்கள இணையத்தளம் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன.

எதிர்காலத்தில் சிறந்த வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வங்கியாகத் திகழ்வது எனும் DFCC வங்கியின் நோக்கத்துக்கமைவாக, வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் ஒப்பற்ற பயன்படுத்தல் இலகுத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வங்கியின் இணையத்தளம் இலங்கையின் சிறந்த இணையத்தளங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், அதனூடாக சிறந்த பாவனையாளர் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக, துரிதமாக இயங்கக்கூடிய திறன் அம்சங்கள், சிறந்த வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புகள் போன்றன ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

இந்த தெளிவான மற்றும் எளிமையான கட்டமைப்புடன், இலகுவான மற்றும் ஒரு அழுத்தலில் பார்வையிடக்கூடிய தன்மை மற்றும் நிபுணத்துவ உணர்வு போன்றன DFCC வங்கியின் இணையத்தளத்தை அனைவர் மத்தியில் சிறந்த வகையில் தென்பட ஏதுவாக அமைந்துள்ளன. 

துல்லியமான, பிந்திய மற்றும் பொருத்தமான தகவல்களை ஒவ்வொரு பாவனையாளரின் தெரிவு மொழியிலும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வங்கியினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலுவும் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விருதின் மூலமாக DFCC வங்கியின் இணையத்தளம் பரிபூரண, நவீன, பாவனையாளருக்கு நட்பான இணையத்தளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சாதாரண வங்கியியல் இணையத்தளம் ஒன்றினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் தீர்வுகளுக்கு அப்பாலான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

DFCC வங்கியின் நிலைபேறாண்மை கொள்கைக்கமைய பகுதியளவு மெய்நிகர் கிளையாக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, கடந்த ஒரு வருட காலமாக வங்கியின் இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டிருந்த முயற்சிகளுக்கு கிடைத்திருந்த அங்கிகாரமாகவும் இந்த விருதுகள் அமைந்துள்ளன. 

DFCC வங்கிக்கு 2020 ஆம் ஆண்டின் BestWeb.LK விருதுகள் வழங்கும் நிகழ்வின் போதும் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. மிகவும் புகழ்பெற்ற இணையத்தளம், சிறந்த தமிழ் இணையத்தளத்துக்கான வெண்கல விருது மற்றும் சிறந்த சிங்கள இணையத்தளத்துக்கான மெரிட் விருது வழங்கப்பட்டிருந்ததுடன், 2021 ஆம் ஆண்டில் சிறந்த வங்கி இணையத்தள விருதும் வழங்கப்பட்டிருந்தது. 

2022 ஆம் ஆண்டுக்குரிய BestWeb.LK விருதுகள் வழங்கலுக்கும் விண்ணப்பிப்பதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டமை மற்றும் இணையத்தள வடிவமைப்பு தொடர்பில் DFCC வங்கியின் டிஜிட்டல் தந்திரோபாயத்துக்கான உப தலைவர் தினேஷ் ஜெபமனி கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டின் BestWeb.LK விருதுகள் வழங்கும் நிகழ்வில் நாம் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். 

எமது பெருமளவான வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் பலருக்கும் முதல் தொடர்பை ஏற்படுத்தும் பகுதியாக எமது இணையத்தளம் அமைந்துள்ளது.

 எம்மைப் பற்றியும், நாம் வழங்கும் சேவைகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக அமைந்துள்ளது. 

இதை புரிந்து கொண்டு, மொபைலில் பார்வையிடக்கூடிய வகையில் சகல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் இலகுவாக பார்வையிடக்கூடிய வகையில் நாம் எமது இணையத்தளத்தை வடிவமைத்திருந்தோம். 

பார்வைக் குறைபாடுகளைக் கொண்ட பாவனையாளர்கள் போன்ற விசேட தேவை கொண்டவர்களையும் கவனத்தில் கொண்டு, W3C Web Content அணுகல் வழிகாட்டல்களைப் பின்பற்றி நாம் இணையத்தளத்தை வடிவமைத்திருந்தோம். 

எமது இணையத்தளம் மூன்று மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இலங்கையர்களாலும் பார்வையிடக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 

மேலும் நாம் Google’s core web vital update ஐயும் 2021 இல் நாம் திரட்டியுள்ளோம்.” என்றார்.

அதிகளவு ஈடுபாட்டை கொண்டிருக்கக்கூடிய வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உதவியான சாதனங்களை வழங்கி, அவர்களால் நிதித் தீர்மானங்களை இலகுவான முறையில் மேற்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதில் பெருமளவான பயனுள்ள நிதிக் கணிப்பான்கள் அடங்கியுள்ளன. 

வருமான வரி, வீட்டுக் கடன்கள், குத்தகை மற்றும் இதர தேவைகளை கணிப்பிடக்கூடிய கணிப்பான்கள் காணப்படுகின்றன. 

இவற்றுடன், வாடிக்கையாளர்கள் மத்தியில் நிதிசார் அறிவை ஏற்படுத்தக்கூடிய வளங்களை கொண்டுள்ளதுடன், அவற்றினூடாக அவர்களுக்கு பொறுப்பு வாய்ந்த மற்றும் தூர நோக்குடைய நிதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது. 

வாடிக்கையாளர்களால் DFCC வங்கியின் சமூக வலைத்தள நாளிகைகளை இணையத்தளத்தினூடாக அணுகக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமக்கு பிடித்த வங்கியுடன் ஒன்லைனில் தொடர்புகளை பேணக்கூடியதாகவும் இருக்கும். 

வங்கியினால் முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்புத் திட்டங்கள் டிஜிட்டல் நாட்காட்டிகளில் நேரடியாக இணைக்கப்பட்டு DFCC Chatz தொடர்பாடல் chatbot ஊடாக தொடர்புகளை பேணும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

DFCC வங்கி பற்றி

DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. 

வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2030, பசுமை பேணும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. 

புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. 

Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. 

DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.