(என்.வீ.ஏ.)

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிபெற்றது.

Shardul Thakur and Anrich Nortje celebrate after combining to remove Bhanuka Rajapaksa, Delhi Capitals vs Punjab Kings, IPL 2022, DY Patil Stadium, Mumbai, May 16, 2022

இந்த வருடம் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் ஈட்டிய 7ஆவது வெற்றி இதுவாகும். 

சுமாரான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட அப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைளைப் பெற்றபோதிலும் ஷர்துல் தாகூர், அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகள் அதன் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

Shardul Thakur had two double-wicket overs, Delhi Capitals vs Punjab Kings, IPL 2022, DY Patil Stadium, Mumbai, May 16, 2022

லியாம் லிவிங்ஸ்டனின் முதல் பந்திலேயே டேவிட் வோர்னர் (0) ஆட்டமிழந்தபோதிலும் சர்பராஸ் கான், மிச்செல் மார்ஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர்.

சர்பராஸ் கான் (32) வெளியேறிய பின்னர் களம் நுழைந்த லலித் யாதவ் 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் மிச்செல் மார்ஷுடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் எஞ்சிய 9 ஓவர்களில் மேலும்  4 விக்கெட்களை இழந்து 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Mayank Agarwal's poor IPL continued as he fell for a two-ball duck, Delhi Capitals vs Punjab Kings, IPL 2022, DY Patil Stadium, Mumbai, May 16, 2022

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்ட் (7), ரோவ்மன் பவல் (2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர்.

மிச்செல் மார்ஷ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களைப் பெற்றார். அக்சார் பட்டேல் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டன் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Axar Patel kept it straight and simple, and got his rewards, Delhi Capitals vs Punjab Kings, IPL 2022, DY Patil Stadium, Mumbai, May 16, 2022

160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 142  ஓட்டங்களைப்  பெற்று தோல்வி அடைந்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் போன்று பஞ்சாப் கிங்ஸ் சார்பாகவும் நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஜொனி பெயார்ஸ்டோவ் (28), ஷிக்கர் தவான் (19) ஆகிய இருவரும் 23 பந்தகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளிகளில் வீழந்தன.

Mitchell Marsh held Capitals' stop-start innings together, Delhi Capitals vs Punjab Kings, IPL 2022, DY Patil Stadium, Mumbai, May 16, 2022

பெயார்ஸ்டோவ், பானுக்க ராஜபக்ஷ (4), தவான், மயன்க் அகர்வால் (0), லிவிங்ஸ்டன் (3), ஹார்ப்ரீட் ப்ரார் (1), ரிஷி தவான் (4) ஆகியோர் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (82 - 7 விக்.)

ஜித்தேஷ் ஷர்மா (44), ராகுல் சஹார் (25 ஆ.இ.) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் டெல்ஹி கெப்பிட்டல்ஸின் நிலை மேலும் மோசமடைந்திருக்கும்.

பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 14 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.