பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

Published By: Digital Desk 3

17 May, 2022 | 12:12 PM
image

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரோன் இரண்டாவது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார்.  இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். 

இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் அமைச்சராக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார்.

Macron nominates Elisabeth Borne as the new Prime Minister of France -  prologiseuropeஎலிசபெத் போர்னி 

61 வயதான போர்ன்,  பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய எலிசபெத் போர்னி, இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், உங்கள் கனவுகளுக்குப் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.

புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.

ஜனாதிபதியும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52