(என்.வீ.ஏ.)
பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று திங்கட்கிழமை (16) ஏஞ்சலோ மெத்யூஸ் கடைசி வீரராக 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியினர் மனமுடைந்து போயினர்.
மெத்யூஸின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 397 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையை அடைந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இலங்கை 397 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
114 ஓட்டங்களிலிருந்து ஏஞ்சலோ மெத்யூஸும் 34 ஓட்டங்களிலிருந்து தினேஷ் சந்திமாலும் தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.
நிதானமாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நயீம் ஹசனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
சந்திமாலும் மெத்யூஸும் 5ஆவது விக்கெட்டில் 136 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நிரோஷன் திக்வெல்ல (3), ரமேஷ் மெண்டிஸ் (1), லசித் எம்புல்தெனிய (0) ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் 8ஆவது விக்கெட்டில் விஷ்வா பெர்னாண்டோவுடன் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.
தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஷொரிபுல் இஸ்லாம் வீசிய பந்து விஷ்வா பெர்னாண்டோவின் ஹெல்மெட்டைப் பதம் பார்த்தது.
இதன் காரணமாக தேநீர் இடைவேளையின் பின்னர் உபாதையை காரணம் காட்டி விஷ்வா பெர்னாண்டோ தற்காலிக ஓய்வு பெற்றார்.
அடுத்து வந்த கடைசி ஆட்டக்காரர் அசித்த பெர்னாண்டோ 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
தற்காலிக ஓய்வின் பின்னர் விஷ்வா பெர்னாண்டோ மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்தார்.
ஏஞ்சலோ மெத்யூஸ் 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நயீம் ஹசனின் பந்துவீச்சை சுழற்றி அடிக்க விளைந்து ஷக்கிப் அல் ஹசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக இரட்டைச் சதத்தை அவர் தவறவிட்டார். அத்துடன் 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த முதலாவது இலங்கையரானார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த 12ஆவது வீரரானார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் நயிம் ஹசன் 105 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.
ஷக்கிப் அல் ஹசன் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தமிம் இக்பால் 35 ஓட்டங்களுடனும் மஹ்முதுல் ஹசன் ஜோய் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM