முஸ்லிம் வயோதிப தாய் ஒருவரை கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்த மகளை கல்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்கமும-வன்னிகுடாவெவ பிரதேசத்தில் தனது 85 வயது வயோதிப தாய் ஒருவரையே அவரது மகள் இவ்வாறு கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்.

குறித்த மகளை கைது செய்த பொலிஸார் தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாயை மகள் இரவு வேளைகளில் சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளதும் அவருக்கு பழுதடைந்த உணவுகளையும் வழங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.