மே 9 வன்முறைகள் : சந்தேகநபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் - புகைப் படங்கள் வெளியீடு

16 May, 2022 | 04:08 PM
image

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அதற்கமைய, அவர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு(CID) அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், 071 859 4901 / 071 859 4915 / 071 859 2087 மற்றும் 011 242 2176 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right