அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வாரகாலத்திற்குள் இறுதி தீர்மானம் - பிரதமருடனான சந்திப்பின் பின் விஜேதாச விளக்கம்

By Digital Desk 5

16 May, 2022 | 08:52 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வாரகாலத்திற்குள் இறுதி தீர்மானத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சு பதவி குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

I have no confidence in the CTF: Wijeyadasa - Breaking News | Daily Mirror

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூககட்டமைப்பில் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகிய சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அதற்கான தீர்வு குறித்து இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.நாடு எதிர்க்கொண்டுள்ள சவால் நிலைமை குறித்து அனைத்து கட்சிகளும் அவதானம் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க இதன்போது இணக்கம் தெரிவித்தோம்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து இச்சந்திப்பின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வார காலத்திற்குள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படும்.அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வரைபுகள் முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது.

அமைச்சு பதவிகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவில்லை.எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற மட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right