ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக  திறந்து வைக்கப்பட்ட இரங்கல் புத்தகத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரின் இல்லத்தில் வைத்து கையொப்பமிட்டார். 

ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.