முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தீயிட்ட 398 பேர் கைது

Published By: Digital Desk 5

16 May, 2022 | 02:06 PM
image

(எம்.மனோசித்ரா)

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதலையடுத்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை 398 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 756 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மேலும் 159 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 20 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு , இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில்  திங்கட்கிழமை(16) காலை 6 மணி வரை 398 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 101 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு , 150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவை தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல்...

2024-07-13 18:33:43
news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 18:33:40
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39