கொழும்பு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என கூறப்படும் “குடு ரொஷான்” உட்பட 11 பேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இரத்தினபுரி பகுதியில் நேற்று (25) இரவு கைது செய்ததாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்குளி சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் பலியானதுடன், மூவர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.