எரிபொருளை பெற வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் ! - காரணத்தை கூறுகிறார் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன

By T. Saranya

16 May, 2022 | 11:20 AM
image

எரிபொருளை நிரப்புவதற்காக எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசைகளில் காத்திருக்க  வேண்டாமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Crises created in last 24 months not legacy of this administration: State  Minister Kanchana

நாட்டிலுள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள்கள் விநியோகம் முடியும் வரை இவ்வாறு வரிசைகளில் பொதுமக்களை காத்திருக்க வேண்டாமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் கடன் அடிப்படையில் நேற்றையதினம் டீசலை ஏற்றிய கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 2 வாரங்களில் 3 கப்பல்கள் இவ்வாறு எரிபொருளுடன் நாட்டுக்கு வரவுள்ளன. இதையடுத்து போதுமான எரிபொருள் கிடைக்கப்பெறும்.

அந்தவகையில் எதிர்வரும் 3 நாட்களுக்குள் நாட்டிலுள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் வரை மக்களை எரிபொருள் நிரப்புவதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right