ரஷ்ய  ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டினுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரிட்டன் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஸ்டீலி என்ற நபர் முன்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர். 

தற்போது ரஷ்யாவின் பல்வேறு தரப்புத் தகவல்களின் படி புட்டின் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புட்டினுக்கு மிகவும் நெருக்கமான தன்னார்வலர் ஒருவரும் புட்டினுக்கு உடல் நிலை இரத்தப் புற்று நோயால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி புட்டின் தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார் என்றும் பச்சை ஆடையால் கால்களை மறைத்து இருந்தார் என்றும் புகைப்பட வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன.