55 வயது கடந்து விட்டாலேயே பலரும் தமக்கு வயதாகி விட்டதாக மனம் சோர்ந்து போகின்ற நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 102 வயது வயோதிபர் ஒருவர் தனது தொழிலிலிருந்து ஓய்வுபெற மறுத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் அவுஸ்திரேலியாவுக்காகப் போராடிய முன்னாள் படைவீரரான பில் ஹொட்க்ஸன் தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் (15) ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது.
மரவேலையில் தீவிர ஆர்வம் கொண்ட அவர் கடந்த 15 வருட காலமாக சிட்னி நகரின் தெற்கேயுள்ள சதர்லான்ட் ஷியர் சிறுவர்களுக்கான பொம்மைகளைத் தயாரிக்கும் மற்றும் திருத்தும் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
அவர் அந்த நிலையத்தில் சிறுவர்களுக்கான சிறிய மேசைகள், கதிரைகள், பொம்மை வீடுகள் என்பவற்றை அவர் தனது தொழில் சகாக்களுடன் இணைந்து உருவாக்கி வருகிறார்.
அதேசமயம் ஹொட்க்ஸன் 102 வயதிலும் தனது தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவரது 79 வயது மகன் தனது பணியிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.
1934 ஆம் ஆண்டில் சிகையலங்காரக் கலைஞராக முதன்முதலாக தொழிலை ஆரம்பித்த அவர் பின்னர் விற்பனைப் பிரதிநிதியாக சேவையாற்றினார். ஹொட்க்ஸனின் மனைவி 5 வருடங்களுக்கு முன்னர் மரணமானதையடுத்து அவர் தனித்து வாழ்ந்து வருகிறார்.
தான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை எனத் தெரிவித்த அவர், தான் தனது பணியை பொழுது போக்காகச் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM