(என்.வீ.ஏ.)
சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் மிக இலகுவாக குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற்றது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடிவரும் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் 9ஆவது தோல்வியைத் தழுவியது.
134 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் அணிகள் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை கிட்டத்தட்ட உறுதிசெய்துகொண்டது.
மொஹமத் ஷமியின் துல்லியமான பந்துவீச்சு, ரிதிமான் சஹா குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் என்பன குஜராத் டைட்டன்ஸின் வெற்றியை இலகுபடுத்தின.
ரிதிமான் சஹாவும் ஷுப்மான் கில்லும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஷுப்மான் கில் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் நுழைந்த மெத்யூ வேட் 20 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 7 ஓட்டங்களுடன் 3ஆவதாக ஆட்டமிழந்தபோது குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தது.
தொடர்ந்து ரிதிமான் சஹா ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றயை உறுதிப்படுத்தினர்.
பந்துவீச்சில் இலங்கையைச் சேர்ந்த 19 வயது வீரர் மதீஷ பத்திரண 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
டெவன் கொன்வே 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் சென்னை சுப்பர் கிங்ஸ் அழுத்தத்தை எதிர்கொண்டது.
ருத்துராஜ் கய்க்வாட், மொயீன் அலி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கை ஊட்டினர்.
மொயீன் அலி 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் கய்க்வாடுடன் 3ஆவது விக்கெட்டில் இணைந்த நாராயன் ஜெகதீசன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ருத்துராஜ் கய்க்வாட் 53 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.
ஷிவம் டுபே (0), அணித் தலைவர் எம். எஸ். தோனி (7) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
நாராயண் ஜெகதீசன் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மொஹமத் ஷமி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM