( எம்.எப்.எம்.பஸீர்)
மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம மீது ஆளும் கட்சி ஆதர்வாளர்கள் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தப்பட்டமைக்கு மேலதிகமாக, மே 9 வன்முறைகளுடன் தொடர்பு என்ற பெயரில் அமைதி ஆர்ப்பாட்டத்துக்கு பங்களுப்பு நல்கியவர்களை பொலிசார் வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் எனவும் இவ்வார்ப்பாட்டப் பேரணி ஊடாக வலியுறுத்தப்பட்டது.
காலி முகத்திடலை அண்மித்த கோட்டா கோ கமவிலிருந்து ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் அலரி மாளிகை நோக்கி சென்றது. முகந்திரம் வீதியூடாக பெரஹர மாவத்தையை ஊடறுத்து அலரி மாளிகை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டத்தை, அலரி மாளிகைக்கு முன்பாக வீதித் தடைகளை போட்டு பொலிசார் மறித்தனர்.
இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியதுடன் பதற்ற நிலை ஒன்றும் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் மீண்டும் தமது கோஷங்களுடன் காலி முகத்திடலை அண்மித்த கோட்டா கோ கமவை வந்தடைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM