மே 9 வன்முறைகள் : 230 பேர் கைது, 707 சம்பவங்கள் குறித்து விசாரணை, அரசியல்வாதிகள் 74 பேரின் சொத்துக்களுக்கு சேதம்

Published By: Digital Desk 5

15 May, 2022 | 06:37 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்து மீறிதாக்குதல் நடத்தப் பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் ( மே 9 வன்முறைகள் ) தொடர்பில்  ( 15) நண்பகலாகும் போது 230 பேரை  பொலிஸார் நாடளாவிய ரீதியில் கைது செய்திருந்துள்ளனர்.

நண்பகல் வரை,  707 வன்முறை சம்பவங்கள்  தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில்,  அச்சம்பவங்கள் குறித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளிலேயே இதுவரை 230 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

9 ஆம் திகதி பதிவான வன்முறைகளின் ஆரம்ப புள்ளியான, கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம  மீதான அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பில்  சி.ஐ.டி.யின்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் சந்ரவின் கீழ் இடம்பெறுகிறது.

இந் நிலையிலேயே அது தவிர்த்த ஏனைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவ்வந்த பொலிஸ் பிரிவுகளின் குற்றத் தடுப்புப்  பிரிவுகளினால் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இந்த 230 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில்  80 இற்கும் அதிகமானோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்ட விரோத கூட்டம், மனிதப் படுகொலை,  தீ வைப்பு, சொத்து சேதம், அத்து மீறல்  உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்களை மையபப்டுத்தி இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

மஹிந்தானந்த அலுத்கமகே :

மே 9 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகேவின் வீடு மீது நாவலபிட்டியவில் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. தாக்குதலைத் தொடர்ந்து மஹிந்தானந்த அலுத்கமகேவின்   செயலாளர் 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த 16 பேரில் நால்வரை  நாவலபிட்டி பொலிசார் கைது செய்து நேற்று முன் தினம்  நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது சந்தேக நபர்களுக்காக இரு சட்டத்தரணிகள் கட்டணமின்றி ஆஜராகினர். இந் நிலையில் முன் வைக்கப்பட்ட விடய்ங்களை ஆராய்ந்த நாவலபிட்டி நீதிவான்  நிலந்த விமலவீர அவர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணைகளில் செல்ல அனுமதியளித்தார்.

துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்ரசேன, சன்ன ஜயசுமன :

இதேவேளை முன்னாள் அமைச்சர்களான  துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்ரசேன மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரின் அனுராதபுரம் இல்லங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறியும்  அனுராதபுரத்தில் பதிவான ஏனைய வன்முறைகள் தொடர்பிலும் ,   தேரர் ஒருவரும், பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்களாக 13 பேரை அனுராதபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் அவர்களைக்  நீதிமன்றில் ஆஜர்  செய்த போது அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஹலியவின் வீட்டின் மீதான தாக்குதல் :

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின்  கண்டி வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் 6 பேரை கண்டி பொலிஸார்  (15)கைது செய்திருந்தனர்.

பிரசன்ன ரணதுங்க :

 அத்துடன் கம்பஹா  - உடுகம்பொளையில்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு மீது தாக்குதல் நடடஹ்தியமை அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் குறித்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஐவரும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரோஹித்த அபேகுணவர்தன :

 இதனிடையே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் அலுவலகம், வீடு மீதான தாக்குதல் தொடர்பில் பயாகல பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் கேகாலையில் கைதுச் செய்யப்பட்ட 18 பேரும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்ப்ட்டுள்ளது.

அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் நால்வர் கைது :

 இதனிடையே,   மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் வைத்து கொல்லப்பட்ட நிலையில், அக்கொலை தொடர்பில் நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அவ்விருவரையும் நேற்று கைது செய்தது. நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சி.சி.ரி.வி. காணொளிகளை அடிப்படையாக கொண்டு இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

74 எம்.பி.மாரின் சொத்துக்களுக்கு சேதம் :

 இதனிடையே இதுவரை பொலிசாருக்கு பதிவாகியுள்ள  தகவல்கள் பிரகாரம்,  மே 9 ஆம் திகதி முதல் பதிவான வன்முறைகள் காரணமாக முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 74 பேரின் சொத்துக்கள் தீ வைத்தும், அடித்தும் சேதபப்டுத்தப்பட்டுள்ளன. அது குறித்த முழுமையான விபரங்கள் வருமாறு :

1.ஹிந்த ராஜபக்ஷ : வீரகெடிய வீடு,  பெற்றோரின் சமாதி  உள்ளடங்களாக நூதனசாலை சேதம்

2. தினேஷ் குணவர்தன: பொரலுகொட காரியாலயம் தீ வைப்பு மற்றும் ஆவணங்கள் அழிப்பு கிருலப்பனை வீடு சேதம்

3.ரமேஷ் பதிரண: காலி வீடு தீக்கிரை

4. பிரசன்ன ரணதுங்க: வீடு, காரியாலயம், 200 மோட்டார் சைக்கிள், 3 வாகனங்கள் தீக்கிரை

5. விமலவீர திஸாநாயக்க: வீடு மற்றும் தனது மகனின் வீடு தீக்கிரை

6. மொஹான் பியதர்ஷன டி சில்வா: காலி மற்றும் ரத்கம வீடுகள் 2 தீக்கிரை, ரத்கம காரியாலயம் தீக்கிரை

7. விதுர விக்ரமநாயக்க: வீடு, காரியாலயம், 3 வாகனங்கள்  தீக்கிரை

8.செஹான் சேமசிங்க: வீடு;, 3 வாகனங்கள் தீக்கிரை

9. கனக ஹேரத்: 2 வீடுகள், காரியாலயங்கள், 4 வாகனங்கள் தீக்கிரை, தொழிற்சாலை சேதம், தந்தையின் தோட்டம் உட்பட தீக்கிரை

10. காஞ்சன விஜயசேகர: வீட்டின் ஒரு பகுதி தீக்கிரை, 3 வாகனங்கள் சேதம்

11.தேனுக விதானகமகே: 2 பேருந்துகள் தீக்கிரை, 2 கட்டிடங்கள் சேதம்

12. பேராசிரியர் நாலக்க கொடஹேவா: கம்பஹா காரியாலயம் மற்றும் வீடு தீக்கிரை

13. பேராசிரியர் சன்ன ஜயசுமன: அனுராதபுர காரியாலயம் தீக்கிரை

14. நஸீர் அஹமட்: வீடு, காரியாலயம், 2 தொழிற்சாலைகள், வியாபார தொகுதி மற்றும் சிற்றுண்டிச்சாலை தீக்கிரை

15. அருந்திக்க பிரார்ணந்து: வீடு, காரியாலயம் மற்றும் வாகனங்கள் உள்ளடங்களாக தீக்கிரை

16. சனத் நிஷாந்த: வீடு, காரியாலயம், 3 மோட்டார் சைக்கிள்கள், 2 உழவு இயந்திரங்கள் மற்றும்  1 முச்சக்கர வண்டி உட்பட தீக்கிரை

17. தாரக பாலசூரிய: வீடு, 3 வாகனங்கள் தீக்கிரை

18. இந்திக்க அனுருத்த: 2 வாகனங்கள், 50 மோட்டார் சைக்கிள்கள், 2 அலுவலகங்கள், 2 வீடுகள் தீக்கிரை

19. சிறிபால  கம்லத்: கிரிதலை வீடு, அலுவலகம் தீக்கிரை

20. கபில அதுகோரல: வீடு சேதம்.

21.கீதா குமாரசிங்க: 2 வீடுகள் மற்றும் 3 வாகனங்கள் தீக்கிரை

22. குனாபால ரத்ன சேகர: வீடு தீக்கிரை

23. சமல் ராஜபக்ஷ: மாகம வீடு, திஸ்ஸ வீடு, மெதமுலன வீடு மற்றும் திஸ்ஸ அலுவலகம் தீக்கிரை

24. ஜோன்ஸ்டன் பிராண்ந்து: வீடு, வாகனம், அலுவலகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

25. காமினி லொகுகே: 3 வீடுகள், 2 வாகனங்கள் மற்றும்  2  அலுவலகம்உட்பட தீக்கிரை

26. பந்துல குணவர்தன: 2 வீடுகள், 2 வாகனங்கள் தீக்கிரை

27.ஜனக பண்டார தென்னகோன்: தும்பளை வீடு தீக்கிரை

28. சி.பி. ரத்னநாயக்க: ஹரஸ்பத்த அலுவலகம் தீக்கரை

29. கெஹெலிய ரம்புக்வெல்ல : கண்டி வீடு தீக்கிரை

30. அநுராத ஜயரத்ன: கம்பளை அலுவலகம் சேதம்

31. டி.வி சானக: தங்காலை அலுவலகம் சேதம்

32 சிசிர ஜயகொடி: அலுவலகம் சேதம்

33. பிரசன்ன ரனவீர: வீடு, 6 வாகனங்கள் மற்றும் அலுவலகம் தீக்கிரை

34. டி.பி ஹேரத்: வாரியபொல வீடு தீக்கிரை

35. வைத்தியர் சீதா அரம்பேபொல: 2 வாகனங்கள் உட்பட வீட்டுக்கும் சேதம் விளைவிப்பு

36. ரோஹன திஸாநாயக்க: வீட்டுக்கு சேதம் விளைப்பு

37. சாந்த பண்டார: வீடு, 3 மோட்டார் சைக்கிள்கள், 1 ஜீப் வண்டி, முச்சக்கரவண்டி தீக்கிரை சேனைக்கும் சேதம் விளைப்பு

38. பியல் நிஷாந்த டி சில்வா: வீட்டுக்கு சேதம் விளைப்பு

39. அசோக பிரியந்த: 2 வீடுகள், 14 வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் சேதம்

40. எஸ்.எம். சந்திரசேன: வீடு, அலுவலகம், மாநாட்டு மண்டபம், வர்த்தக நிலையங்களுக்கும் சேதம்

41. மஹிந்தானந்த அளுத்கமகே: நாவலபிட்டி வீடு, அலுவலகம் சேதம்

42. ரோஹித்த அபேகுணவர்தன: 2 அலுவலகங்கள், 2 வீடுகள், மோட்டார் சைக்கிள் தீக்கிரை

43. நாமல் ராஜபக்ஷ: மனைவியின் வீடு தீக்கிரை

44. ரொஷான் ரணசிங்க: பொலன்னறுவை வீட்டுக்கு சேதம் விளைப்பு, உபகரணங்கள் திருட்டு 2 வாகனங்கள் சேதம்

45. சசீந்திர ராஜபக்ஷ: செவனகல வீடு தீக்கிரை

46. ஜயந்த கெடகொட: வீடு மற்றும் சகோதரர் வீடு சேதம்

47. அமர கீர்த்தி அதுர கொரல: வீடு சேதம், வாகனங்கள் சேதம் ; பாராளுமன்ற உறுப்பினர் கொலை

48. சம்பத் அதுகோரல: வீடு சேதப்படுத்தப்பட்டு 2 அறைகள் தீக்கிரை

49. சானக்க குட்டி ஆராய்ச்சி: வீடு சேதம்

50. யு கே சுமித் உடுகும்புர: 2 வீடுகள், 1 வாகனம் தீக்கிரை மேலும் சில வாகனங்கள் சேதம்

51. அகில சாலிய எல்லாவெல: வீடு, காரியாலயம், 2 வாகனங்கள் சேதம்

52. லலித் எல்லாவல: அலுவலகம் சேதம்

53. சனத் குமார சமித்ர ஆராய்ச்சி: அலுவலகம் சேதம்

54. நாலக்க கொட்டகோட: வீடு தீக்கிரை, அலுவலகம், 3 வாகனங்கள் சேதம் ( 1 அரச வாகனம் உட்பட)

55. கோகில குணவர்தன: வீடு, சகோதரர் வீடு, 2 வாகனங்கள் தீக்கிரை

56. மிலான் ஜயதிலக்க: வீடு, வாகனம், 5 மோட்டார் சைக்கிள் தீக்கிரை

57. இசுரு தொடங்கொட: தாயாருக்கு சொந்தமான ஜீப் சேதம்

58. பிரேமநாத் தொலவத்த: வீடு சேதம்

59. எச். நந்தசேன: வீடு சேதம்

60. பியுமி அனுப பஸ்குவேல்: மத்துகம வீடு சேதம்

61. சிந்தக்க அமல் மாயாதுன்னை: வீடு, அலுவலகம் சேதம்

62. நிபுன ரணவக்க: அலுவலகம் சேதம்

63. அலி சப்ரி ரஹீம்: 2 வீடுகள், அலுவலகம், 1 கப் ரக வாகனம், 8 மோட்டார்சைக்கிள் மற்றும்  வர்த்தக நிலையம்  தீக்கிரை

64. அஜித் ராஜபக்ஷ: பஸ் வண்டிக்கு சேதம்

65. குணதிலக்க ராஜபக்ஷ: அலுவலகம் சேதம்

66. உபுல் மகேந்திர ராஜபக்ஷ: வீட்டுக்கு சேதம்

67. ராஜிக்கா விக்ரமசிங்க: யட்டியாந்தோட்டை வீட்டுக்கு சேதம்

68. சஹன் பிரதீப் விதான: வீட்டுக்கு சேதம்

69. டி. வீரசிங்க: வீடும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீக்கிரை

70. சமன் பிரிய ஹெரத்: வீடு, வாகனம், அலுவலகம் தீக்கிரை

71.லலித் வர்ண குமார மஞ்சு: வீடு, அலுவலகம் சேதம்

72. சந்திம வீரக்கொடி: அபுகல வீடு, அலுவலகம் சேதம்

73. நிமல் லான்சா: வீடு,வாகனம், வர்த்தக நிலையம் தீக்கிரை மற்றும் சேதம்

74. பிரியங்கர ஜயவர்தன: மாதம்பை வீடு சேதம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51