மருந்துகள், மருத்துவ உபகரண கொள்வனவிற்கு தேவையான டொலர் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ருவான் விஜேவர்தன

Published By: Digital Desk 5

16 May, 2022 | 10:50 AM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சுக்கு மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வளவு டொலர்கள் தேவைப்படுகின்றன என்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி முழுமையான அறிக்கையை சமர்பிப்பதாக மருந்து விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார்.

சத்திரசிகிச்சைக்கான சத்திரசிகிச்சை உபகரணங்கள் உட்பட இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, பிரதமர் அலுவலகத்தில்  நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் கூடிய போதே  சுகாதார அமைச்சின் செயலாளர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

நோயாளிகளுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் விநியோகத்தர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் , தற்போது 34 பில்லியன் ரூபா அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு கடந்த 4 மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படாமையின் காரணமாக அவற்றை இயலுமையற்ற நிறுவனங்களாக ஆவணப்படுத்தும் நடவடிக்கையினை வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

கடந்த 4 மாதங்களாக எவ்வித மருந்துகளையும் , மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்கு முன்னரே அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் , தற்போதுள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வெளிநாடுகளில் உதவியை நாட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை விடுவித்த போதிலும் , டொலர் தட்டுப்பாடு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக எதனையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் போது, ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் அவசர தேவையாக குறிப்பிட்ட அளவு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகள் 14 உள்ளன. அவற்றில் இரண்டு மருத்துவப் பிரிவில் இல்லை. அதில் ஒன்று இதய நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும். எனினும் இதற்கான மாற்று மருந்துகளை உபயோகிக்கக் கூடிய வழிகள் உள்ளன என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் வெறிநாய்க்கடிக்கு எதிரான மருந்து தற்போது முற்றாக முடிந்துவிட்டது. நாட்டில் அதற்கு மாற்று மருந்து இல்லை. இது அரச மருத்துவ விநியோகத் துறையில் இல்லை என்ற போதிலும் தனியார் துறையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு தேவையான 646 மருந்துகள் உள்ளன, அவற்றில் 188 மருந்துகள் மருத்துவ விநியோக பிரிவில் இல்லை. தனியார் நிறுவனங்களில் அவற்றில் 50 மருந்துகள் இல்லை. அத்தியாவசியமற்ற 486 மருந்துகளில் 21 மருந்துகள் அரச மருந்து விநியோகப்பிரிவில் இல்லை. அவற்றில் 49 மருந்துகளுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.

சத்திர சிகிச்சைகளுக்காக 7854 உபகரணங்கள் உள்ளன. இவற்றில் 2048 உபகரணங்கள் பாவனைக்கு அவசியமாகும். எனினும் அவற்றிலும் 1155 உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஏப்ரலில் மருந்து தட்டுப்பாடு உக்கிரமடைந்ததால் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து 27 மில்லியன் டொலர் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அவர்களிடமிருந்து மேலும் 50 மில்லியன் டொலர் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் பணத்தை செலுத்தி மருந்துகளைக் கொள்வனவு செய்வதிலும் சிக்கல் ஏற்படலாம் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் இதன் போது தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கு மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வளவு டொலர்கள் தேவைப்படுகின்றன என்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி முழுமையான அறிக்கையை சமர்பிப்பதாக மருந்து விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார்.

புதிய பிரதமரின் நியமனத்துடன், ஏற்கனவே பெற்ற கடனை திருப்பி செலுத்தி, மேலும் நான்கு மாதங்களுக்கு கடன் அடிப்படையில் மருந்துகளை இறக்குமதி செய்வது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் கலந்தாலோசித்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளர்களுக்கு தனியார் துறை வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்குவதற்கு உதவிகள் வழங்கப்படும் என இதன் போது ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

தனியார் துறை மருந்து இறக்குமதியாளர்களின் கிடங்குகள் மற்றும் உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகளில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53