ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தின் அனுசரணையுடன் இலங்கை அகதிகள் 40 பேர், நாளை இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ளனர்.

நாளைய தினம் திருச்சியிலிருந்து கட்டுநாயக்கவை நோக்கி பயணிக்கவுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (Ul 132) விமானத்தில் இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

 22 ஆண்கள் மற்றும்  18 பெண்கள் உள்ளடங்களாக 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.