விடுமுறை காரணமாக எரிபொருள், எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் : வரிசைகளில் நின்ற மக்கள் ஆர்ப்பாட்டம்

15 May, 2022 | 03:33 PM
image

வெசாக் பண்டிகை முன்னிட்டு விடுமுறை தினம் என்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருந்த மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டமையால் வீதிக்கிறங்கி ஆரப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 40 000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்தது. 

எதிர்வரும் வியாழக்கிழமை மேலும் 40 000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எனினும் இதற்கு முன்னர் 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்த கப்பலுக்குரிய டொலர் செலுத்தப்படாத காரணத்தினால் அக் கப்பல் கடந்த சில தினங்களாக கடலில் நங்கூரமிட்டபட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்றும் பல பிரதேசங்களில் எரிவாயுவைக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் 35000 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் வருகை தந்துள்ள கப்பலொன்றும் டொலர் செலுத்தப்படாமையால் கடற்பரப்பில் நங்குரமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது குறிப்பிட்டளவு எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அவை வழங்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right