இந்­துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.!

Published By: Robert

26 Oct, 2016 | 09:31 AM
image

இந்து தம்­ப­தியர் அதிக அளவு குழந்­தை­களை பெற்­றுக்­கொள்­வது குறித்து தீவி­ர­மாக ஆலோ­சிக்க வேண்டும் என்று மத்­திய சிறு மற்றும் நடுத்­தர தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரி­வித்­துள்­ளமை பெரும் சர்ச்­சையை ஏற்படுத்­தி­யுள்­ளது.

சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­வதை வாடிக்­கை­யாக கொண்­டவர் அமைச்சர் கிரிராஜ் சிங். இந்த நிலையில், உத்­த­ரப்­பி­ர­தேச மாநிலம் சக­ரன்­பூரில் நடை­பெற்ற நிகழ்ச்­சியில் கலந்து கொண்ட கிரிராஜ் சிங், இந்­தி­யாவில் இந்து மதம் பாது­காக்­கப்­பட வேண்­டு­மானால் இந்­துக்களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். ராமர் கோயில் கட்ட வேண்டும் என மக்கள் கோரி வரு­கின்­றனர். ஆனால் ராமர் பக்­தர்கள் எண்­ணிக்கையை அதி­க­ரிக்­காமல் எப்­படி ராமர் கோயில் கட்ட முடியும்?

நாட்டில் உள்ள 8 மாநி­லங்­களில் தொடர்ந்து இந்­துக்­களின் எண்­ணிக்கை குறைந்து கொண்டே வரு­கி­றது. தேசப் பிரி­வி­னையின் போது பாகிஸ்­தானில் 22 சத­வீதம் இந்­துக்கள் இருந்­தனர். ஆனால் தற்­போது 1 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளனர். அப்­போது இந்­தி­யாவில் இந்­துக்கள் 90 சத­வீ­தமும், முஸ்­லிம்கள் 10 சத­வீ­தமும் இருந்­தனர்.

ஆனால் தற்­போது முஸ்­லிம்கள் 24 சத­வீதமாக அதிகரித்துள்ளனர், இந்­துக்கள் 76 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளனர். எனவே இந்து மக்கள் தங்கள் மக்கள் தொகையை அதி­க­ரிப்­பது குறித்து பரி­சீ­லிக்க வேண்டும். இந்­துக்கள் அதிக குழந்­தை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்றார். மத்­திய அமைச்­சரின் இந்த பேச்­சுக்கு எதிர்­க்கட்­சிகள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52