தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (14) இடம் பெற்றது.

 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும், எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவேந்தல்  முன்னெடுக்கப்பட இருக்கின்றன. 

அந்தவகையில், தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார்.

இந்த கருத்தரங்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பழநெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் தி.மு.க போன்றோர் பங்கேற்பார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.