கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் தேவையை அறிந்து செயற்படும் வகையில் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

காணொளியொன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யுமாறும் தேவைகளை ஆராயுமாறு குறித்த குழுவினருக்கு பிரதமர் பணித்துள்ளார்.

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை  செயற்பாடுகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

இதேவேளை அடுத்த இரு வாரங்களே எமக்கு மிகவும் தீர்க்கமான வாரங்களா அமையப் போகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் நான் எமது நாட்டின் பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் வெளிப்பாடுகள் சிறந்ததாக அமைந்தது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளியை பார்வையிட

https://www.youtube.com/watch?v=wpUFwmxjwbA