பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தினமன்று பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைருமான சஜித் பிரேமதாஸ பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பதவிக்கு  ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சார்பில் அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிவதற்கு அக்கட்சியினுள் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களுக்கும்ரூபவ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அஜித் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த பதவி தெரிவின் போது பொதுஜனபெரமுன தரப்பிலிருந்து யாரையும் நிறுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது அந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.