திரு­மண புகைப்­ப­டங்­களை சமூக தொடர்­பாடல் தளங்­களில் பரி­மாறக் கூடாது என மண­ம­க­னுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை மண­மகள் மீறி­யதால் திரு­ம­ண­மொன்று அது இடம்­பெற்று இரு மணித்­தி­யா­லங்­களில் விவ­ாக­ரத்தில் நிறை­வு­பெற்ற சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. 

தனது புது மனைவி திரு­மண புகைப்­ப­டங்­களை சினப்சட் இணை­யத்­தள பக்­கத்­தி­னூ­டாக தனது நண்­பி­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ளதை அறிந்த மண­மகன் சின­ம­டைந்து திரு­மணம் இடம்­பெற்று இரு மணித்­தி­யா­லங்­களில் விவா­க­ரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

இது தொடர்பில் மண­ம­களின் சகோ­தரர் சவூதி அரே­பிய தின­ச­ரி­யான ஓகா­ஸுக்கு அளித்த பேட்­டியில், திரு­மண புகைப்­ப­டங்­களை அல்­லது காணொளிக் காட்­சியை சினப்சட்,  இன்ஸ்­டா­கிராம் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லான சமூக இணை­யத்­த­ளங்­களில் பரி­மா­றக்­கூ­டாது என மண­ம­க­னுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை தனது சகோ­தரி மீறி­ய­தா­லேயே மண­மகன் விவா­க­ரத்து கோரி­யுள்­ள­தாக  தெரி­வித்தார்.

இந்த உடன்­ப­டிக்­கை­யா­னது திரு­மணம் தொடர்­பான ஒப்­பந்­தத்தில்  உள்­வாங்­கப்­பட்டு பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்த விவா­காரம்  இரு­த­ரப்பு குடும்­பத்­தினர் மத்­தி­யிலும் கடும் வாக்­கு­வா­தத்தை தோற்­று­வித்துள்ளது.

மேற்­படி உடன்­ப­டிக்கை நிமித்தம் விவா­க­ரத்துக் கோரு­வது நீதி­யற்ற ஒன்­றென மண­ம­களின் குடும்­பத்­தினர் குற்­றஞ்­சாட்­டிய அதே­ச­மயம், மண­ம­க­னுக்கு மண­ம­களின் செயல் நிமித்தம் விவா­க­ரத்துக் கோரு­வ­தற்­கான உரிமை உள்­ளது என மண­ம­கனின் குடும்­பத்­தினர் வாதிட்­டனர்.

இந்த வருட ஆரம்­பத்தில் திரு­ம­ண­மாகி ஹோட்டல் அறைக்கு சென்ற சமயம் தனது புது மனைவி தன்னை அலட்சியம் செய்து  நண்பி களுக்கு எழுத்து வடிவ செய்தியை அனுப்புவதில் ஆர்வம் காட்டியமை க்காக கணவர் ஒருவர் விவாகரத்துக் கோரிய சம்பவம் சவூதி அரேபிய ஜெடாஹ் நகரில் இடம்பெற்றிருந்தது.