(ஆர்.ராம்)

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானதித்துள்ளது. 

இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், 

பொருளாதார நெருக்கடிகள் பற்றி சர்வகட்சிக் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்தார்.

அச்சமயத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்படும் வரையில் அவருடைய பங்களிப்பு அவசியமானது என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி இருந்து வருகின்றது. 

இந்நிலையில், அவர் தற்போதைய நெருக்கடியான நிலைமைகளை கையாள்வதற்காக பிரதமர் பதவியைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அந்த வகையில் அவருடைய செயற்பாடுகளுக்கு நாம் பூரணமான ஆதரவினை வழங்கவுள்ளோம் என்றார்.