(எம்.மனோசித்ரா)

இலங்கையின் முன்னோக்கிய நகர்வுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பன்னாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்தோடு நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சி தலைவர் தூதுவர்களிடம் கலந்துரையாடினார்.

இலங்கைக்கான  ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் லோதர் சியூபர்ட், பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட்டு, நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்தாலி தூதுவர் ரீட்டா கியுலியானா மானெல்லா,  ரோமானிய தூதுவர் விக்டர் சியூஜெடா உள்ளிட்ட தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.