முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிஸ் பாதுகாப்பு ; ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

Published By: Digital Desk 3

14 May, 2022 | 06:23 PM
image

கே .குமணன் 

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் பொலிஸாரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு  முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் இராணுவத்தினர் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்று ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் வீடியோ பதிவு செய்ததன் பின்னர் ஊடகவியலாளர் திரும்பி சென்ற நிலையில்  முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில்  நின்ற பொலிஸார் இராணுவ புலனாய்வாளர்களின் தூண்டுதலின் பெயரில் குறித்த சந்தியில்  ஊடகவியலாளரை மறித்தனர்  ஊடகவியலாளர் எதற்காக மறைக்கிறீர்கள் என்று கேட்டபோது எந்தவித பதிலையும் சொல்ல முடியாது நின்ற பொலிஸார் சிறிது நேரத்தில் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை கோரினர் அடையாள அட்டை வழங்கிய ஊடகவியலாளர் ஏன் என்று கேட்டபோது  வீடியோ எடுத்தீர்களா என கோரி   தங்களுடைய பதிவேடு ஒன்றில் விபரங்களை பதிவு செய்தனர்  இவ்வாறான பின்னணியில்  பொலிசாரின் உடையை இந்த செயற்பாடுகள் தொடர்பில் காணொளி பதிவு செய்ய முயன்ற போது உங்களுடைய வாகனத்தின் சாரதிஅனுமதி பத்திரம் மற்றும் ஆவணங்களை காண்பிக்குமாறு பொலிஸார் கோரி அவற்ரையும் வாங்கி பதிவுசெய்து அனுப்பியுள்ளனர் .

ஊடகவியலாளர் வரும்போது குறித்த பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் பொலிஸாருடன் கலந்துரையாடிய வண்ணம் இருந்ததாகவும் அவர்களுக்கு தகவல்களை வழங்கவே பொலிசார் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில்  நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில் மக்களை அச்சமடைய செய்யும் நோக்குடன் பொலிஸார்   அங்கு செல்பவர்கள் அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து  தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு அங்கமாகவே  குறித்த பகுதிக்கு சென்றுவந்த ஊடகவியலாளரை மறிந்த பொலிஸார் ஊடகவியலாளரிடம்  ஆவணங்களை கோரி ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்ததன் ஊடாக குறித்த தகவல்களை புலனாய்வாளர்களும் இராணுவத்தினருக்கும்  வழங்குவதற்காகவே பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் இராணுவம்,புலனாய்வாளர்கள் விபரங்களை பெற்றால் அது பிரச்சினையாக வரும் என்பதால் அவர்களின் எடுபிடிகளாக   பொலிசார்  செயற்படுவதாக ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41