மன்னாரில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் விழுந்து பலி

Published By: Digital Desk 3

14 May, 2022 | 06:13 PM
image

மன்னார் செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்சி சென்ற இளம் குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில் இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிரிஸ்தோபர் ஜாக்லின் வயது 29 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (13) மதியம்  கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர் .

இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில் இன்று சனிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்களினால் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31