Published by T. Saranya on 2022-05-14 18:02:50
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வெசாக் தோரணம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

சீரற்ற காலநிலையை அடுத்து வீசிய கடும் காற்றினாலேயே குறித்த தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கொழும்பின் பல பகுதிகளில் வெசாக் தோரணம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வெசாக் தோரணம் பலத்த மழை மற்றும் காற்றையடுத்து சரிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




