குணசிங்கபுரவில் எரிவாயு கேட்பதற்காக மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 06:28 PM
image

குணசிங்கபுர மக்கள் சமய எரிவாயு பெறுவதற்காக பல நாட்கள் காத்திருந்தும் எரிவாயு கிடைக்காத நிலையில் இன்று (14) பிரதேசத்திலுள்ள பாதையை மறித்து  மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதேசத்தில் போக்குவரத்து செய்யமுடியாது வாகனச்சாரதிகள் பெரிதும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

கடந்த வியாழக்கிழமை வாழைத்தோட்ட மக்களுக்கு எரிவாயு பெற்றுத் தருவதாக  வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் அம்மக்களுக்கு எரிவாயு பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

குறித்த தினத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்த நிலையில் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருந்தும் ஏமாற்றமே கிடைத்தது. 

இதன் காரணமாக மக்கள் கோபமடைந்து தமது கேஸ் சிலிண்டர்களை குணசிங்கபுர பிரதான வீதிக்கு குறுக்காக வைத்து இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர். இதன் காணரமாக அப்பகுதி போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த இராணுவ அதிகாரியொருவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு கதைத்து  எதிர்வரும்    புதன்கிழமை (11) எரிவாயுவை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27