Published by T. Saranya on 2022-05-14 17:05:28
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அவசர கடிதமொன்றை இன்று (14) அனுப்பி வைத்திருந்தார்.
அதில் அமையவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை வழங்குமாறும் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியில் பங்கேற்குமாறும் வேண்டுகோள் விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதத்தை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதில் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் , பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு ஆதரவளிப்போம் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம் எனவும் தெரிவித்து பிரதமர் ரணிலுக்கு சஜித் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
