புதிய அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (14) பதவியேற்றனர்

இடைக்கால அரசாங்கத்தில் அரச சேவைகள் அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஜீ.எல். பீரிஸும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அத்துடன் வலுச்சக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகரவும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.