கல்கிஸ்ஸவில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அத்திட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.