(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெசாக் பூரணை தினத்தன்றும் அடுத்த தினமன்றும் (15,16 )  நாட்டில் உள்ள சகல மதுபானசாலைளையும் மூடும்படி  இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி அறிவித்துள்ளார்.  

காலவரையின்றி மூடப்படுகின்றதா மதுபான சாலைகள்! - அடங்காப்பற்று - செய்திகள்-  Tamil News - Daily Tamil News - Tamil Nadu - adangapatru.com

இவ்வாறு  மூடிவைக்கும் இரண்டு தினங்களிலும் சட்டத்தை மீறும் வகையில் மதுபானசாலைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதா என்பதை கண்டறிவதற்கு விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் குறித்து நாட்டின் சகல மதுவரித் திணைக்களத்தின் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் வருமானத்திற்கு இலங்கை சுங்க அதிகார சபை, உள்நாட்டு வருவாய் திணைக்களம் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊடாக கிடைப்பெறுவதாகவும், நாளொன்றுக்கு மதுபானசாலைகளை மூடுவதால் அரசாங்கத்திற்கு 50 கோடி ரூபா வருமானம் இழக்கப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.