பூங்கோதை எழுதிய 'நிறமில்லா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத்தலைவரும் சட்டத்தரணியுமான ந. காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நூலின் முதல் பிரதியை 'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனுக்கு வழங்கினார்.

அதிதியாக கலந்துகொண்ட மனோ கணேசனுக்கு நூல் பிரதியை நூலாசிரியர் பூங்கோதை (கலா சிறிரஞ்சன்) வழங்கினார்.

இந்நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் உடுவை தில்லை நடராஜா, குமரகுருபரன், ஜனகன், ஆ. கந்தசாமி, மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜா ஆகியோர் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)