கட்சி சாரா ஒருவரை அரச தலைவராக தெரிவு செய்ய வேண்டும் - அமரபுர மகா சங்க சபை

Published By: Digital Desk 5

14 May, 2022 | 02:01 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தனிநபரை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும். 

சமூகத்திலிருந்து கட்சி சாராத ஒரு தலைவரே அரச தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும். 

அவ்வாறில்லை எனில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளரும் பதில் மகாநாயக்க தேரருமான பேராசிரியர் பல்லேகந்தே ரத்தனசார தெரிவித்தார்.

புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை.

இவ்வாறான நிலையில் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியிலும் , சர்வதேச தொடர்புகளைக் கொண்டவர் என்ற ரீதியிலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ளார்.

 எனினும் இதன் ஊடாக நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும் என்று நாம் நம்பவில்லை.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் இதுவல்ல. ரணில் விக்கிரமசிங்கவினால் தற்போதுள்ள சமூக முறைமையை மாற்றியமைக்க முடியாது. 

அவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 1948 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வந்த ஜனநாயகத்திற்கு என்ன ஆயிற்று? மகா நாயக்க தேரர்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

கட்சி சாராத ஒருவரே இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாத்திரமல்ல , நாட்டில் தற்போதுள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் பொருளாதாரம் குறித்த கண்ணோட்டம் கிடையாது. 

எனவே சமூகத்திலிருந்து கட்சி சார்பற்ற சிறந்த தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். 

இதனை அமரபுர மகா சங்கசபையின் நிலைப்பாடாகக் கருத வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59