நாட்டில் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிகவெரட்டிய
நிகவரட்டிய - மாகெல்ல குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய வெடியெ கெதர- நிகவெரடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று நிகவெரடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பயணித்த படகு உடைந்து மூழ்கியதிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் நிகவெரடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார்
மன்னார் - சவுத்பார் களப்பிற்கு மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர் 29 வயதுடைய எமில்நகர், மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.