கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் பக்கவாதம், முடக்குவாதம், முதுகுத்தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டவர்கள்..

முறையான சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள இயலாத நிலை இருந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அகற்றுவதற்கும், அவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்குவதற்கும் தற்போது நியூரோமாடுலேசன் தெரபி எனப்படும் நவீன சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும் போதும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட நவீன மின்தூண்டல் கருவிகள் மூலம் சிகிச்சை வழங்கப்படுவதால், எம்முடைய நரம்புகள் சரியான அளவில் தூண்டப்பட்டு, தடைப்பட்டிருந்த இயக்கங்கள் சீரமைக்கப்படுகிறது. 

இதன்மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. பக்கவாத பாதிப்பு மட்டுமல்லாமல் முடக்குவாதம், முதுகுத்தண்டு காயம் ஏற்பட்டவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. 

அத்துடன் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலின் செயல்பாடுகளை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கும் இத்தகைய சிகிச்சைகள் நல்ல பலனை வழங்குகின்றன.

டொக்டர் கோடீஸ்வரன்.

தொகுப்பு அனுஷா.