(எம். எம். சில்வெஸ்டர்)

நாட்டின் நீண்ட கால வெற்றிக்கு தற்போது காலிமுகத்திடல் முன்னெடுக்கப்பட்டுவரும் 'கோட்டா கோ கம' மக்கள் எழுச்சி போராட்டம் மிக முக்கியம் வாய்ந்ததாக விளங்குகிறது. 

முன்னிலை சோசலிச கட்சி Archives - தமிழ்க் குரல்

புதிய அரசாங்கமொன்று  அமைக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள், எரிவாயு, மருந்து வகைகள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்கச்  செய்தவுடன்  போராட்டத்தை கைவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது அவசியம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொடி தெரிவித்தார்.

சுவிஸ்,டென்மார்க் ஆகிய நாடுகளில் காணப்படும் மீளப்பெறுவதற்கான உரிமையை (Right To Recall ) இலங்கையிலும் சட்டமாக்கப்பட  வேண்டும். 

அத்துடன், பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டமூலங்கள் தொடர்பில் மக்களது கருத்தைப்  பெற வேண்டுமென்பத்துடன், அதற்கான அதிகாரத்தை நீதிமன்றுக்கு வழங்கப்படல்  வேண்டும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

பொரள்ளையிலுள்ள என். எம். பெரேரா மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண் டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், "அதிக்கூடிய பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் மக்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுக்கிப்போனது. 

இதன் மூலம் மக்களே அதிகாரமிக்கவர்கள் என்பது உறுதியாகிறது.'கோட்டா கோ கம'  என்பது  கோட்டாபய ராஜபக்சவை செல்லுமாறு கூறுவது மாத்திரமன்றி நாட்டில் உள்ள நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையையும் அகற்ற வேண்டும். 

மக்களால் ஓரங்கட்டப்பட்ட  ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்த‍ைமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு யாரால் சர்வதேச நாணயம் நிதியத்திடமும், வெளிநாட்டுகளிடமும் அதிகளவான கடன் தொகையை பெற முடியுமோ அதனை கருத்தில் கொண்டே பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனால் நாட்டின் கடன் சுமை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் வகுக்கப்படுவது அவசியம்.

'கோட்டா கோ கம' கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு செயலாளர் என்ற பேரில்  ஓய்வுபெற்ற மேஜர் ‍ஜெனரல் கமல் குணரட்ண கட்டளை பிறப்பித்த‍மை சட்டத்திற்கு முரணானது. அமைச்சரவை பதவி விலகியதும் அவரும் பதவியில் இருக்க முடியாது. 

இவ்வாறு இருக்கையில், அவர் கட்டளை பிறப்பித்தமை சட்டத்திற்கு முரணானது. ஆகவே, அவர் முதலில் கைது செய்யப்பட வேண்டும். அவரால் அப்பாவி பொது மக்களை கைது செய்ய முடியாது. அதற்கு நாம் இடமாளிக்க மாட்டோம்" என்றார்.